கனடாவில் புதிதாக வேலை தேடுவோர் மற்றும் புத்தாண்டில் வேலை மாற்றம் விரும்புவோருக்கு அரிய வாய்ப்புகள் காத்திருப்பதாக கூறுகின்றனர்.பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், திறமையானவர்களுக்கு ஏற்பட்டுள்ள

பற்றாக்குறையை நிரப்புவதற்காக அனைத்து பின்னணியில் இருந்தும் பல்வேறு வேலை வாய்ப்புகளுடன் பல நிறுவனங்கள் இன்னும் பணியமர்த்துகின்றனர்.அந்த வகையில் கனடாவில் உள்ள Randstad என்ற நிறுவனமானது கனடாவில் பிரபலமான

15 பணிகளுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.ஆனால் ஒவ்வொரு மாகாணத்தை ஒப்பிடுகையில் ஊதியங்களில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.1 முதல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபம் கொண்டவர்களுக்கான ஊதியமே தொடர்புடைய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
