நமது உடலில் ஓடும் இரத்தமானது பல்வேறு கூறுகளால் ஆனது. நமது இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள் மற்றும் பிளாஸ்மா ஆகியவை உள்ளன. இது தவிர ஆன்டி-ஜென் மற்றும் ஆன்டிபாடிகளும் உள்ளன. இந்த ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடிகளைக் கொண்டு தான் ஒருவரது உடலில் எந்த வகை இரத்தம் ஓடுகிறது என்று கூறப்படுகிறது. இரத்த வகையானது மரபுவழியாக பெற்றோரிடம் இருந்து பெறப்படுகிறது.

இரத்த பிரிவுகளானது ஏ, பி, ஏபி, ஓ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவரது இரத்தம் அவரைப் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தும். குறிப்பாக இரத்த வகைகளைக் கொண்டு ஒருவருக்கு எந்த வகையான நோய்களின் அபாயம்
அதிகம் உள்ளது என்பதை அறியலாம் என்பது தெரியுமா? இப்போது இதுக்குறித்து தான் பார்க்கப் போகிறோம். கீழே ஒருசில நோய்களும், அந்த நோய்க்கு எந்த இரத்த பிரிவினர் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் இரத்த பிரிவுக்கு எந்த நோயின் அபாயம் அதிகம் உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.
இதய நோய்நீங்க ஓ இரத்த வகையா? அப்படியானால் உங்களுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், அது ஏன் என்று நிபுணர்களுக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் ஓ இரத்த வகையுடன் ஒப்பிடுகையில், மற்ற இரத்த வகைகளுக்கு உயர் கொலஸ்ட்ரால் மற்றும் அதிக அளவு புரோட்டீன் உறைதல் ஆகியவற்றுடன் தொடர்பு அதிகம் இருப்பதால், இதற்கு வாய்ப்புள்ளதாக சில நிபுணர்கள் நினைக்கிறார்கள்.
வயிற்று புற்றுநோய்ஓ இரத்த வகையினரை விட ஏ, ஏபி மற்றும் பி இரத்த வகையினருக்கு தான் வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக ஏ இரத்த வகையினருக்கு தான் வயிற்று புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இதற்கு காரணம் இந்த வகையினருக்கு எச்.பைலோரி தொற்று அதிகமாக இருப்பதால் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பொதுவாக இந்த பாக்டீரியாவானது வயிற்றில் காணப்படும். இது அதிகமாகும் போது, அது வயிற்றில் அழற்சி மற்றும் புண்களை உண்டாக்குகிறது.
நினைவாற்றல் பிரச்சனைதற்போது நிறைய பேர் நினைவாற்றல் பிரச்சனையை சந்திக்கிறார்கள். சிறு விஷயத்தைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள சிரமப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நினைவாற்றல் பிரச்சனையானது மற்ற இரத்த வகைகளை விட ஏபி இரத்த வகையினருக்கு தான் அதிகம் ஏற்படுவதாக சிறு ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கணைய புற்றுநோய்உங்களின் இரத்த வகை ஏ, ஏபி அல்லது பி ஆக இரந்தால், உங்களுக்கு கணைய புற்றுநோய்க்கான அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் ஏ மற்றும் பி வகையில் உள்ள இரத்த செல்கள் வயிற்றில் உள்ள எச்.பைலோரி பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே தான் இந்த இரத்த வகையினருக்கு கணைய புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது.

மன அழுத்தம்மன அழுத்தமானது உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவை அதிகரிக்கும். இந்த மன அழுத்த ஹார்மோன் ஏ இரத்த வகையினரிடம் இயற்கையாகவே அதிகம் இருக்கும். எனவே தான் ஏ இரத்த வகையைச் சேந்தவர்களால் மன அழுத்த சூழ்நிலையை கையாள்வது கடினமாக உள்ளது.
மலேரியாமலேரியா காய்ச்சலால் ஓ இரத்த வகையினர் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக மலேரியாவை உண்டாக்கும் கொசுக்கள் கடிக்கும் போது தான் மலேரியா காய்ச்சல் வரும். இந்த மலேரியா கொசுக்களுக்கு ஓ இரத்த வகை மிகவும் பிடிக்கும். எனவே தான் ஓ இரத்த வகையினருக்கு மலேரியா வருவதற்கான அபாயம் அதிக உள்ளது.
அல்சர்சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் உள்ள அமிலம் இரைப்பை சுவர்களை சேதப்படுத்தி வலிமிகுந்த புண்களை உண்டாக்கி, அல்சர் பிரச்சனையை சந்திக்க வைக்கும். இந்த அல்சர் பிரச்சனையால் ஓ இரத்த வகையினர் தான் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.
இரத்த உறைவுVTE என்பது வெனஸ் த்ரோம்போம்போலிசம் ஆகும். இது கால்களில் உள்ள ஆழமான நரம்புகளில் ஏற்படும் இரத்த உறைவு நிலை ஆகும். சில சமயங்களில் இந்த இரத்த உறைதலானது நுரையீரல் வரை நகரும். இப்பிரச்சனையால் ஏ, பி அல்லது ஏபி இரத்த வகையினர் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நீண்ட ஆயுள்நீண்ட ஆயுளைக் கொண்ட இரத்த வகையினர் என்றால், அது ஓ இரத்த வகையினர் தான். இதற்கு ஓ இரத்த வகையினருக்கு இதய நோய் மற்றும் இரத்த நாள் பிரச்சனைகள் போன்றவற்றின் அபாயம் குறைவாக இருப்பது ஓர் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சர்க்கரை நோய்தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்கள் காண்பது மிகவும் கடினம். ஏனெனில் அந்த அளவில் சர்க்கரை நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஏ மற்றும் பி இரத்த வகையினருக்கு தான் டைப்-2 சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இதுக்குறித்த ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பக்கவாதம்நீங்கள் ஏபி இரத்த வகையை சேர்ந்தவரா? அப்படியானால் உங்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயம் மற்ற இரத்த வகைகளைக் காட்டிலும் அதிகம் உள்ளது. எனவே பக்கவாதம் வராமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க தொடங்குங்கள்.Source; boldsky