கொழும்பினை நோக்கி படையெடுக்கும் யாழ் இளைஞர்கள். பல வருடங்களுக்கு பின் விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிற நிலையிலும் இதை ஒரு திருவிழா போல் அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று வெளியாகிய வாரிசு மற்றும் துணிவு படத்திற்காக மிக ஆவலுடன் இரு தரப்பினரும் போட்டி போட்டு பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் வாரிசு மற்றும் துணிவு படம் பார்க்க ஆர்வமாக இருக்கும்

ரசிகர்களுக்கு யாழில் 1 கிழமைகளுக்கு புக்கிங் புள் என்ற காரணத்தினால் பல தரப்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கொழும்பு திரையரங்கில் அதிகளவான டிக்கெட் இருப்பதனை அறிந்து இன்று 11.30 க்கு காட்சியினை பார்வையிட அதிகமானவர்கள் கொழும்புக்கு இன்று வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Source:lkinfo