ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும்போது, நம் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் தொடங்க வேண்டும் என அனைவரும் நினைப்போம். அந்த வகையில், 2023 புதிய ஆண்டில் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற நாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். காலாவதியான நம்பிக்கைகள், யோசனைகள் மற்றும் சிந்தனை

முறைக்கு பெரிய ‘நோ’ சொல்லுங்கள். வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவதே சிறந்த யோசனை. அதற்காக நம் வீடுகள், உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நம் வாழ்வில் சிறந்த விஷயங்களுக்கு இடத்தை உருவாக்கலாம். அதை அடைய, நம் காலாவதியான நம்பிக்கைகள் மற்றும் முறைகளுக்கு ‘நோ’ என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
சுய-கட்டுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் சாத்தியத்தை நிராகரிப்பதன் மூலம், வரும் ஆண்டில் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுடையதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்திற்காக 2023 இல் வேண்டாம் என்று சொல்ல வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உடற்பயிற்சி இல்லாமைஉடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மோசமானது. ஏனெனில், உடற்பயிற்சி இயற்கையாகவே உங்கள் ஆரோக்கியத்தையும் மனநிலையை மேம்படுத்துகிறது. அதை நாம் மறுக்க முடியாது. உடற்பயிற்சியின் நன்மைகள் பல ஆண்டுகளாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. வழக்கமான உடற்பயிற்சி உங்கள் மனதையும் உடலையும் வடிவமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆதலால், தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள்.
சமூக ஊடக போதைசமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு பதின்ம வயதினருக்கு மன அழுத்தம் மற்றும் குறைந்த சுயமரியாதை உணர்வுகளை ஊக்குவிக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நம் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக சமூக ஊடக போதைப் பழக்கத்தின் சுழற்சியை உடைப்பது நமது நன்மைக்காகவே. அதிகப்படியான நேரம் சமூக ஊடகங்களில் இருப்பது கண் சோர்வு மற்றும் மன உளைச்சலுக்கு வழிவகுக்கும். எனவே, அதை குறைக்க உங்கள் புத்தாண்டு தீர்மானங்களில் சமூக ஊடகத்திற்கு அடிமையாவதை நிறுத்துங்கள்.
மோசமான நடத்தைமோசமான நடத்தையில் ஈடுபடுவது அல்லது அதற்கு பலியாவது இரண்டும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மற்றவர்களிடம் அதிக இரக்கமும், மரியாதையும், அன்பும் கொண்டவராக மாற கற்றுக்கொள்ளுங்கள், மற்றவரின் வலிக்கு காரணமாக நீங்கள் இருக்காதீர்கள். இது 2023 இல் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும்.
எதிர்மறை சிந்தனை முறைநாம் அடிக்கடி தீய எதிர்மறை எண்ணங்களில் சிக்கிக் கொள்கிறோம். சுழற்சியை உடைத்து, அசைவற்ற நிலையில் இருந்து நம்மை நாமே அசைக்க வேண்டிய நேரம் இது. நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது நமது கண்ணோட்டத்தை மாற்றி, விஷயங்களின் பிரகாசமான பக்கத்தைப் பார்க்க உதவும். ஆதாலால், எப்போதும் நேர்மறையான சிந்தனைகளையே கொண்டிருங்கள்.

நிலையான ஒப்பீடுமகிழ்ச்சியற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடும் இந்த நிலையான பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது குறைந்த ஆற்றல் மற்றும் பொறாமை உணர்வுகளின் நிலையில் இருக்க வழிவகுக்கும். உங்கள் முயற்சி மற்றும் நம்பிக்கையை என்றும் கைவிடாதீர்கள். உங்கள் உயர்ந்த நன்மைக்காக உங்களுக்குச் சாதகமாக எல்லாம் செயல்படும். உங்களிடம் இருப்பதில் திருப்தியடைய கற்றுக்கொள்ளுங்கள்.
தேவையற்ற குற்ற உணர்வுஉங்கள் வாழ்க்கையில் ஏராளமாக மகிழ்ச்சிகள் வர இருப்பதை வரவேற்க கடந்தகால வருத்தங்களையும் குற்ற உணர்ச்சிகளையும் விட்டுவிட வேண்டிய நேரம் இது. பழைய விஷயங்கள் எதையும் மனதில் வைத்து குற்ற உணர்வு கொள்ளாதீர்கள். எப்போதும் உங்கள் தேவைகளுக்கு முதலிடம் கொடுங்கள். அது ஓய்வு தேவையாக இருந்தாலும் கூட. உங்களுக்கு என்ன தேவை, எப்போது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே.
அன்பை பரப்புங்கள்மற்றவர்களிடம் வெறுப்பையும் விரக்தியையும் வைத்திருப்பது நாம் உணர்ந்ததை விட நம்மை அதிகம் காயப்படுத்துகிறது. எனவே, அனைத்து வெறுப்புகளையும் விட்டுவிட்டு அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். இவ்வுலகில் அன்புதான் நிலையானது. அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்புங்கள்