தமிழர் பகுதியில் வாழும் ம் நபர் ஒருவர் முன்னால் போராளி என கூறி புலம்பெயர் தமிழ் அப்பாவிகள் அனுப்பிய கோடிக்கணக்கான பணத்தில் 2வது மனைவியுடன் காரில் திரியும் சம்பவம் ஒன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பில் அந்நபரின் மூத்த மனைவி கூறிய தகவல்கள் சமூக வலைத்தங்களில் வெளியாகியுள்ளது. யுத்தத்தில் படுகாயமுற்று குடும்பத்தினருடன் மிகவும் கஷ்டப்படும் முன்னாள் போராளி என கூறி 2016ம் ஆண்டு முகநூலில் காணொளி ஒன்று வெளியானது.
அதில் கால்கள் நடக்க இயலாத நிலையில் 3 சில் சைக்கிள் ஒன்றில் இருந்தவாறு 35 வயதான நபர் தனது மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளுடன் இருந்து உதவி கோரியிருந்தராம்.அப்போது அவர் மிகவும் வறுமை நிலையிலேயே இருந்துள்ளார். ஆனால் அவரது கால் தொடையில் செல் துண்டு பாய்ந்திருந்தாலும் அவர் சாதாரணமாக நடக்க கூடிய நிலையில் இருந்தாராம்.

கடினமான வேலைகள் செய்வதற்குத்தான் சிறிது சிரமப்பட்டுள்ளார். அதேசமயம் 3 சில்லு சைக்கிளில் திரியும் அளவுக்கு அவர் காயப்படவில்லை எனவும் மனைவி கூறினார்.அத்துடன் அவர் போராளி இல்லை என்றும் போராட்டகாலத்தில் எல்லைப்படைக்காக மாதத்தில் சில நாட்கள் சென்று வந்தவர் எனவும் மனைவி கூ றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இறுதி யுத்தத்தில் தங்களுடன் இருக்கும் போதே அவருக்கு செல் துண்டுபட்டு காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.முகநூலில் வெளியான காணொளியின் பின்னர் அவரது வங்கிக் கணக்குக்கு கருணை உள்ளம் படைத்த புலம்பெயர் தமிழ் அப்பாவி உறவுகள் பணம் அனுப்ப தொடங்கியுள்ளார்கள். இதனியடுத்து தன்னுடனும் பிள்ளைகளுடனும் சந்தோசமாக இருந்த அவர் பணம் வந்தவுடன் தலைகீழாக மாறியதாகவும் மனைவு கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது குறித்த நபர் யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் காணி வாங்கி 2017ம் ஆண்டு புதுவீடு கட்டியிருந்தாதலும் அதில் தங்களை குடியேற அவர் விடவில்லை எனவும் மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.அந்த வீட்டில் குடியிருந்தால் தமக்கு உதவி கிடைக்காது என கூறி கிளிநொச்சியில் முன்னர் இருந்த கொட்டில் வீட்டிலேயே வசித்து வந்ததாக தெரிவித்த நபரின் மனைவி, , தற்போது அந்நபர் இரண்டாவது திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாராம்.
அதேவேளை புலம்பெயர் தேசத்தில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது இரவுபகலாக வேலைசெய்து குருவிபோல சிறுகச்சிறுக சேர்த்தபணத்தை தாயகத்தில் உதவி செய்யவென அனுப்பிவைக்க இவ்வாறான சில ஏமாற்று பேர்வழிகளிடம் அது சென்றடைகின்றமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.