சுருக்கமாக சொன்னால், உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் பயத்தின் காரணமாக அப்படி தோன்றுகிறது. எதைப்பற்றியும் எப்போதும் பயம் மற்றும் கவலை இல்லாதவர்களுக்கு ஜாதக பலன்கள் தேவை இல்லை. அவர்கள் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கின்றவர்கள்.

ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் அப்படி இல்லை. நமக்கு நிறைவேறாத ஆசைகளும் அதனை ஒட்டிய பயங்களும் அதிகம். எனவே, நிகழ்காலம் நன்றாக இருந்தாலும் வருங்காலத்தைப்பற்றிய ஒரு பயம் அல்லது எதிர்பார்ப்பு நிறைந்த குறுகுறுப்பு தலைக்குள் ஓடிக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது.

நடக்க இருக்கின்ற விடயங்களை சோதிடத்தால் ஓரளவுக்கு கணித்து சொல்லிவிட முடியும். அவை சில நேரங்களில் உங்கள் வாழ்க்கையுடன் ஒத்துப் போகும் போது, நீங்கள் ஒரு இரண்டும் கெட்டான் நிலைக்கு உங்களை தள்ளி விடுகின்றீர்கள்.சோதிடத்தை பார்ப்பதனால் நம்பிக்கையோடு பாருங்கள். எந்த பயமும் இல்லையா, சோதிட கணிப்புகள் உங்களுக்கு தேவையே இல்லை.