இந்து சமய நம்பிக்கைகளின் படி, தொடரும் பிறவிகளில் ஒருவரின் பிறப்பு அவர் முந்தைய பிறவிகளில் ஏற்கனவே செய்த வினைகளின் எச்சமாக அமைகிறது. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவர்கள் இந்தப் பிறவியில் மேலும் செய்யும் வினைகளை வெளிக்காட்டும் கருவியாக அமைகின்றார்கள்.

நல்ல குழந்தைகள் அமைவதைப் பற்றி மக்கட்பேறு என்ற ஒரு அதிகாரத்தையே வள்ளுவர் அமைத்துள்ளார்.ஏழு தலைமுறைகள் வரை ஒருவர் செய்த வினைகள் தொடரும். ஒருவர் தன் முன்னோர்களையும் குடும்பத்தையும் கஷ்டப்படுத்துவாரேயானால் அவருக்கான தண்டனை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ரூபத்தில் அமையும்.
ஒருவரின் ஜாதகம் அவரது பெற்றோர் ஜாதகத்தின் தொடர்ச்சியாக அமைவதை பாரக்கலாம்.சில மோசமான கிரகச் சேர்க்கைகள் வழிவழியாக தொடரும்போது முன்னோர் சாபம் உள்ளதாக பலன்கள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக ஐந்தாம் அதிபதி திதிசூன்ய ராசியில் அமைவது, குடும்பத்தில் எல்லா குழந்தைகளுக்கும் சூரியன்

நீசமாக இருப்பது, 8,10ல் ஏகப்பட்ட கெட்ட கிரகங்கள், செவ்+சூரி கிரக சேர்க்கை எல்லா குழந்தைகள் ஜாதகத்திலும் இருப்பது, சனி+ராகு சேர்க்கை, ஏகப்பட்ட உச்ச நீச கிரகங்கள் இருப்பது, குண்டக்க மண்டக்க பரிவர்த்தனைகள், 4,9 ஆம் இடம் கெடுவது போன்றவை முன்னோர்கள் சாபத்தை குறிக்கும் சில அடையாளங்கள்.
ஏற்கனவே வந்ததை அழி ரப்பர் வைத்து அழிக்கவா முடியும்? இனிமேல் வராமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு பின்னால் வரும் சந்ததிகளை காப்பதே பரிகாரம்.இருக்கும் பெற்றோரை நல்லபடியாக பார்த்துக்கொள்வது,

தென்புலத்தாருக்கு முறையாக விடாமல் திதி கொடுப்பது, வயதான பெரியோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடாமல் நல்லபடியாக பராமரிப்பது போன்றவையே பரிகாரங்கள்.
பின்வரும் தலைமுறை நன்றாக இருக்க வேண்டுமெனில் இவற்றை செய்தே ஆக வேண்டும்.வாழ்த்துகள்!