இதுல உங்க பெருவிரல் எந்த மாதிரி இருக்குன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்..!!

ஜோதிடம்

ஒவ்வொருவருக்குமே நமது எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைத்து வகையான முயற்சிகளையும் பலர் செய்வதுண்டு. ஒருவரின் எதிர்காலத்தை அறிவதற்கு பல வழிகள் உள்ளன.


எப்படி கைகளில் உள்ள ரேகைகள் ஒருவரின் எதிர்காலத்தைக் கணிக்க உதவுகிறதோ, அதேப் போல் கடல்சார்வியல் ஒருவரது உடல் உறுப்புக்களின் வடிவம் மற்றும் அளவுகளைக் கொண்டு எதிர்காலம் மற்றும் குணாதிசயங்களைப் பற்றி கூறுகிறது. இக்கட்டுரையில் பெருவிரலின் அளவு மற்றும் வடிவம் ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.

மெல்லிய பெருவிரல்கடல்சார்வியலின் படி, மெல்லிய மற்றும் ஒல்லியான பெருவிரலைக் கொண்டவர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இவர்கள் வியாபாராத்தில் வெற்றி பெற ரிஸ்க் எடுக்க அச்சம் கொள்ளமாட்டார்கள். அதோடு, இவர்களுக்கு பண ஆசையும் அதிகம் இருக்கும். இவர்கள் கடினமாக உழைத்து சம்பாதிப்பதால், தேவையற்ற செலவுகளை செய்யமாட்டார்கள். முக்கியமாக இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார்கள். எனவே இவர்களின் பொழுதுபோக்கும் உயர்ந்தவையாக இருக்கும்.

சிறிய பெருவிரல்சிறிய பெருவிரலைக் கொண்டவர்கள் தத்துவஞானிகள். அதோடு இவர்கள் ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களின் மனதில் இருப்பதை எளிதில அறிந்து கொள்வார்கள்.

இத்தகையவர்களிடம் உள்ள ஒரு கெட்ட விஷயம் என்னவென்றால், இவர்கள் மிக விரைவில் மோசமாக உணர்வார்கள். மேலும் மோசமான விஷயஙகள் நீண்ட நேரம் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் உள்ளது ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இவர்கள் நல்ல விஷயங்களை உடனே ஏற்றுக் கொள்வார்கள்.


வளையக்கூடிய பெருவிரல்வளையக்கூடியவாறான பெருவிரலைக் கொண்டவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்று நம்பப்படுகிறது. அதோடு இவர்கள் எதையும் தெளிவாக பேசக்கூடியவர்கள்.

இவர்களுக்கு ஒருவரது முதுகிற்கு பின்னால் பேசுவது பிடிக்காது. மனதில் ஒன்றை வைத்து வெளியே ஒன்றை பேசமாட்டார்கள். யாராக இருந்தாலும், மனதில் பட்டதை முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார்கள். நன்கு பேசக்கூடியவர்கள். இந்த குணத்தால், இவர்களை அனைவருக்குமே பிடிக்கும்.


தடிமனான பெருவிரல்தடிமனான மற்றும் அகலமான பெருவிரலைக் கொண்டவர்களுக்கு மிகவும் வேகமாக கோபம் வரும். கோபத்தில், இவர்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால், அவர்களை சாந்தப்படுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். பல நேரங்களில் இவர்கள் கோபத்தால் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வார்கள். இவர்களின் தோற்றம் இவர்களை சற்று கடினமானவர்களாக வெளிக்காட்டிலும், உண்மையில் இவர்கள் மனதளவில் மென்மையானவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *