நிறைமாத கர்ப்பிணியாக கூட வந்து விவாகப் பதிவு செய்ய கூறுபவர்கள் இருப்பதாக விவாக பதிவாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் தரித்து விவாகப் பதிவினை மேற்கொள்ள வருகிறார்கள். அவ்வாறானவர்களின் நிலைமை என்ன?இப்போதைய சட்டத்தின் படி வைத்தியசாலையில் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் போது திருமணப் பதிவுச் சான்றிதழ் கோரப்படுகிறது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் என்ற கட்டம் இருக்கும்.

இவ்வாறான சூழலில் திருமணப் பதிவுச் சான்றிதழ் இல்லையெனில் தந்தையின் பெயர் நிரப்ப வேண்டிய இடத்தில் தெரியாது என நிரப்பப்படும்.இது சமூகத்தில் பிள்ளைக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா என சுட்டிக்காட்டியுள்ளார்.