யாருங்க சொன்னது மேக்கப் போடாத பெண்களை அதிகம் பிடிக்கிறது என்று.எனக்கு எல்லாம் ‘”மேக்கப்'”போட்டா தான் பிடிக்கும், முதல்ல மேக்கப்பின் அர்த்தத்தை நான் எவ்வாறு எடுத்துக் கொண்டேன் என்றால்…தமிழில் தன்னை “மேம்படுத்துவது” என்று தான் அர்த்தம் கொள்கிறேன் .

அதாவது ஒரு பெண்ணானவர் பல்வேறு நிலைகளில் தாய் சகோதரி அத்தை பாட்டி என்று பல்வேறு குடும்ப உறவு நிலைகளில் “உறவு” என்ற மேக்கப் அணிந்து தன்னை தன்னை மேம்படுத்திக் கொள்கிறார் அது அவருக்கு அழகை இன்னும் மெருகூட்டுகிறது.அதில் சிலவற்றை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்
பெண்ணானவர் திறமையற்ற கணவனை திருமணம் செய்த பொழுது அவரை மதித்து அவரை அறிவில் சிறந்தவன் ஆக்கி அவர் உயர்ந்த நிலைக்கு வரும் பொழுது அப்பெண்னாநவர் அவரின் “திறமையை” மேக்கப் ஆக அணிந்து அழகுருகிறார்

கணவன் கைவிட்டு சென்ற பின் தன் குழந்தைகளை விட்டுவிட்டு வேறொரு திருமணம் செய்யாமல் உழைத்து தன் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரும் பொழுது “தன்னம்பிக்கை”என்ற மேக்கப்பை அணிந்து அழகுருககிறார்
மனம் ஒத்து வராத கணவன் தன்னை விட்டு விட்டு சென்ற பின்னாலும் தனக்கு குழந்தை இல்லை என்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையே வந்தாலும் தன் தன்னைப் பெற்ற பெற்றோருக்காக மாடாக உழைத்து கடைசிவரை அந்த குடும்பத்தையே தாங்கிப் பிடித்து தூணாக இருந்து “உழைப்பு” என்ற மேக்கப் அணிந்து பெருமை அழகுருககிறார்…

நடைபாதை கடையில் வியாபாரம் செய்தாலும் தன் குழந்தை பசியில் அழுகையின் பொருட்டு தன் சேலை மறைப்பால் குழந்தையின் பசியை ஆற்றும் “தைரியம்” என்ற மேக்கப் பால் அழகுருகிறார்.தன் ஆண் குழந்தைகளை மற்ற பெண் குழந்தைகளை மதித்து நடக்க வேண்டும் என்ற அறிவுரையை சிறுவயதிலிருந்தே
அவருக்குக் கற்றுக் கொடுத்த வளர்த்து வரும்பொழுது “ஆசிரியை” என்ற மேக்கப் அணிந்து அழகுருகிறார்.ஒரு பெண்ணானவள்…. அன்பு, இரக்கம்,கோபம், தைரியம், திறமை,ஆகியவற்றை மேக்கப் ஆக அணிந்து இருத்தலே சிறப்பாக இருக்கும்.எனவே மேக்கப் அணிந்திருந்தால் அழகு கூடுமே தவிர குறையாது …

அதன் பொருட்டே அவ்வையார், கண்ணகி, மணிமேகலை, அன்னைதெரசா,கைவிளக்கேந்திய காரிகை, வீரமங்கை வேலுநாச்சியார், ராணி மங்கம்மாள் ,ஜான்சிராணி, ராணி பத்மாவதி இன்னும் எண்ணற்றோர் இது போன்ற குணங்களை “மேக்கப்” ஆக அணிந்ததாலே புகழ் பெற்று நற்செயல்களை உலகத்தில் விதைத்து உள்ளனர் எனவே இதுபோன்ற மேக்கப் அணிந்திருந்தால் தான் எக்காலத்திலும் அழகுதான்….. அதனால மேக்கப் நல்லது
