2024ஆண்டில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடைய மாணவர்களுடன் வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய பிள்ளைகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது மட்டத்தில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களை சிறப்புக் கல்விப் பிரிவுகளுக்கு வழிநடத்தப்படவுள்ளது.

கடுமையான குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு 4 வயது முதல் கல்வி கற்பிக்கவும், 5 வயதுக்குள் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த குழந்தைகளின் பதிவு குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் உதவியுடன் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.