இலங்கை ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் இடமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்!அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்.தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மற்றும் தாபன விதிக் கோவை அத்தியாயம் 111 கீழ் ஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லக் கூடிய சந்தர்ப்பங்கள்.

வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின் கீழ் இடமாற்றம்.🔥2007/20 மற்றும் 2005/1,ED/3/37/9/2/3(1) ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் அடிப்படையில் பின்வரும் பாடசாலைகளில் குறித்த சேவைக் காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் ,வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் மூலம் விரும்பிய பாடசாலைக்கு இடமாற்றம் பெறலாம்.
அதி கஷ்ட பிரதேச பாடசாலைகள் எனில் குறைந்தது 3 வருட கால சேவைப் பூர்த்தி.கஷ்ட பிரதேச பாடசாலைகள் எனில் குறைந்தது 4 வருட கால சேவைப் பூர்த்தி.விருப்பமான பாடசாலை எனில் குறைந்தது 8 வருட கால சேவைப் பூர்த்தி.
மிகவும் விருப்பமான பாடசாலை எனில் குறைந்தது 6 வருட கால சேவைப் பூர்த்தி.வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு விண்ணப்பம் கோரப்படும் போது வலயம்/மாவட்டம்/மாகாணம்/தேசிய மட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
5 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்க முடியும்.மாகாணப் பாடசாலை ஆசிரியர்கள் இடமாற்ற விண்ணப்பத்தை அதிபர்கள் ஊடாக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

தேசிய பாடசாலை ஆசிரியர்கள் நிகழ் நிலை மூலம் விண்ணப்பித்த பின்னர் அதன் வன் பிரதிகளை அதிபரின் அங்கீகாரத்துடன் தேசிய பாடசாலை இடமாற்ற கிளைக்கு சமர்பிக்க வேண்டும்.மருத்துவ காரணங்களுக்கான இடமாற்றம்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியரின் பராமரிப்பில் கீழ் உள்ளவர்களின் மருத்துவக் காரணங்களுக்காக ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் பெறலாம்.இதற்காக ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
குறித்த ஆசிரியரின் நோய் தொடர்பான மருத்துவச் சான்றிதழ்.கணவர்/பிள்ளைகள்/பெற்றோர்கள்/கணவரின் பெற்றோர்களின் மருத்துவச் சான்றிதழ்.பெற்றோர்கள்/கணவரின் பெற்றோர்கள் குறித்த ஆசிரியரின் பராமரிப்பில் கீழ் உள்ளார்கள் எனும் கிராம உத்தியோகத்தரின் சிபாரிசு கடிதம்.

இடமாற்ற விண்ணப்பத்தை அதிபர்கள் ஊடாக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.இரு ஆசிரியர்கள் ஒத்து இடமாறுதல்.ஒரே பாடத்தைக் கற்பிக்கும் இரு ஆசிரியர்கள் பரஸ்பரம் ஒத்து இடமாற்றம் பெறலாம்.
இதற்காக பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.இரு ஆசிரியர்களும் பரஸ்பரம் ஒத்து இடமாற்றம் பெறுவதற்கான சம்மதக் கடிதம்.இரு பாடசாலை அதிபர்களும் இரு ஆசிரியர்களும் ஒத்து இடமாற்றம் பெறுவதற்கான சம்மதக் கடிதம்/சிபாரிசுக் கடிதம்.
இரு ஆசிரியர்களினதும் இடமாற்ற விண்ணப்பத்தை அதிபர்கள் சிபாரிசு செய்தல்.தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மேற்படி ஆவணங்களை நேரடியாக தேசிய பாடசாலை இடமாற்றக்கிளையில் சமர்பிக்க வேண்டும்.மாகாணப் பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர் ஊடாக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

தற்காலிக இடமாற்றம்.பின்வரும் சந்தர்ப்பங்களில் #npteachers ஆசிரியர்கள் தற்காலிக இடமாற்றம் பெறலாம்.கர்ப்பிணி ஆசிரியர்கள் மருத்துவக் காரணங்களுக்காக ஆசிரியர் ஒருவர் விபத்தின் காரணமாக நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்ற மருத்துவ அறிக்கை.
சுகயீனமான குழந்தையின் பராமரிப்பு போன்ற மருத்துவ காரணங்களுக்காக.அசாதாரண நிலையில் வேறு மாவட்டம்/ மாகாணப் பாடசாலை ஒன்றிற்கு சமூகமளிக்க முடியாத நிலை. தற்காலிக இடமாற்றம் பெற சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
தற்காலிக இடமாற்றம் பெற விண்ணப்பிக்கும் பாடசாலை அதிபரின் நேரசூசி வழங்க முடியும் என்ற சிபாரிசு கடிதம்.பதில் ஒழுங்குக்கான ஆசிரியரின் சம்மதக் கடிதம்.மருத்துவக் காரணங்களுக்காக எனில் மருத்துவச் சான்றிதழ்.

மாகாணப் பாடசாலை ஆசிரியர்கள் மேற்படி ஆவணங்களை அதிபர் ஊடாக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மேற்படி ஆவணங்களை நிரந்தர அதிபர் ஊடாக தேசிய பாடசாலை பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஒழுக்காற்று நடவடிக்கை அடிப்படையில் இடமாற்றம்.பாடசாலையில் பின்வரும் ஒழுங்கற்ற நடத்தைகள் கொண்ட ஆசிரியர் ஒருவர்,தாபன விதிக் கோவை அத்தியாயம் 111 இன் கீழ் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் இடமாற்றம் வழங்கப்படும்.
மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனை.மாணவர்கள்/ பெற்றோர்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பெறுதல்.பாடசாலைச் சொத்துக்களை சேதமாக்கும்/திருடுதல்/சொந்தத் தேவைக்கு பாவித்தல் போன்ற குற்றங்கள்.
பாலியல் சார்ந்த குற்றங்கள்.முறையான கற்றல் கற்பித்தலில் ஈடுபடாமை.மாணவர்களுக்கு உடல் உள ரீதியான தண்டனை வழங்குதல்.பொதுசன ஊடகங்களில்/பொது மக்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குதல்.
மேலதிக ஆசிரியர்களின் இடமாற்றம்.
பாடசாலையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினருக்கு மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும்.அதாவது அங்கீகரிக்கப்பட்ட நேரசூசி இல்லாத/வாரமொன்றில் 30-32 பாட வேளைக்கு குறைந்த ஆசிரியர்.
மேலதிக ஆசிரியர்கள் இடமாற்றம் பெற சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்.ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பத்தில் அதிபர் பதிலீடு இன்றி விடுவிக்க சிபாரிசு செய்ய வேண்டும்.பாடசாலையில் மேலதிக ஆசிரியர் என்ற கடிதம்.தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மேற்படி ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பத்துடன் மேலேயுள்ள ஆவணங்களை இணைத்து தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற கிளையில் நேரடியாக ஒப்படைக்கும் போது, இடமாற்றத்தை பெற்றுக்கொள்ளலாம்.From:Batti Chandrakumar