வொர்க் நேச்சர் ஆஃப் ஜாப் என்ன? (textile Desgner என்று போட்டு இருந்தோம்).Designerனா எந்த மாதிரி?என்ன Design பண்ணுவாரு? அதை எங்க படிச்சாரு? MCA னு போட்டுருக்கீங்க?கம்பெனி Goverment மாதிரியா இல்ல Private ah?

எத்தன வருசமா Work பண்ணுறாங்க?Officeக்கு வீட்டுக்கும் எவ்வளவு தூரம்?Bikeல போவாரா பஸ்ல போவாரா?EPF எல்லாம் Officeல பிடிக்கிறாங்களா?வீடு வாங்கிருக்கேன்னு சொல்றீங்க அப்படினா வீட்டு லோனை பையன் கட்டுவாரா இல்ல பையனோட அப்பா கட்டுவாரா?அவரு எங்க வேலை பார்க்குறாரு?.இது எல்லாம் கூட பிரவாயில்லை .
ஆமா வீடு ஆத்து மணல்ல கட்டுனதா இல்லை M sand ல கட்டுனதானு கேட்டாங்க பாருங்க கடைசியா ஒரு கேள்வி.அவன் அவன் வாழ்க்கையில போராடி கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு.ஒரு நல்ல சம்பளத்துல ஒரு வேலை வாங்கி .கடன் இல்லாம சிஷ்டருக்கு கல்யாணம் பண்ணி வச்சி நல்லது கெட்டது பார்த்து வச்சி

27,28 வயசுக்குள்ள படாத பாடு பட்டு லோனுக்கு லோ லோனு அலைஞ்சி லோனை வாங்கி.சொந்தமா ஒரு வீடு வாங்கி வாழ்க்கையில செட்டில் ஆகி அப்புறம் தான் இந்த கன்னி பையன் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சா அட போங்கம்மா இப்படி எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டா நானும் தான் என்ன பண்ணுறது?
நாங்க ஆண்கள் வாங்கிட்டு வந்த வரம் அப்படி.ஒன்னு சொல்றேன் நோட்டை எடுத்து எழுதி வச்சிக்கோங்க முடிஞ்சா யாழ்பாணத்துல எங்கையாவது கல்வெட்டுலையே கூட எழுத்து வச்சிடுங்க.”ஆண்கள் பாவம் பொல்லாதது , அதிலும் என்னை மாதிரி கன்னி பசங்க பாவம் பொல்லாததோ பொல்லாதது”

ஆக, பொண்ணுக்கு பையனை தேட சல்லடை எடுத்துட்டு கிளம்பும் பெரிவர்களே, மேட்ரிமோனிகளே, ஆன்றோரே சான்றோரே கொஞ்சம் இதையெல்லாம் மனசுல வச்சி கேள்வி கேளுங்க. எங்கள் பக்கம் இருந்தும் கொஞ்சம் யோசிங்க.©Copyrightlkinfo