நீங்களும் இவ்வாறு செய்தால் YouTube வலைத்தளத்திலிருந்து லட்சத்தில் உங்களுக்கும் பணம் வரும்..!! வாங்க பார்க்கலாம்.!

செய்திகள்

ஆம், சுருக்கமாக சொல்கின்றேன். YouTube தளத்தில் பணம் சம்பாதிப்பது இலகுவான விடயம் அல்ல. ஆனால், மிகவும் கஷ்டமான விடயம் கிடையாது. நீங்கள் YouTube இல் பணம் சம்பாதிக்க வேண்டும் எனில், இரண்டு நிபந்தனைகளினை கட்டாயம் தாண்டியிருக்க வேண்டும்.


2020ஆம் ஆண்டுக்கு ஏற்ப குறித்த நிபந்தனைகளில் ஒன்று நீங்கள் ஆரம்பிக்கும் YouTube சேனல் குறைந்தது 1,000 Subscribers இணை கொண்டிருக்க வேண்டும் என்பது, மற்றையது உங்களது YouTube சேனலில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் கடந்த 12 மாதங்களில் குறைந்தது 4,000 மணித்தியாலயங்கள் வரையில் பார்வையாளர்கள் மூலம் பார்வையிடப்பட்டிருப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் உங்களது YouTube சேனல் பூர்த்தி செய்திருந்தால் நீங்கள் YouTube இல் பணம் சம்பாதிப்பதற்குரிய விண்ணப்பத்தை (Monetize) சமர்ப்பிக்க முடியும். குறித்த விண்ணப்பம் (YouTube Partner Program) பின்னர், YouTube நிறுவனம் மூலம் பரீட்சிக்கப்பட்டு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்குத் தரப்படும்.

நீங்கள் YouTube இல் பணம் சம்பாதிப்பதற்கான தகுதியினை பெறும் சந்தர்ப்பத்தில், உங்களது Gmail கணக்கிற்குரிய AdSense கணக்கினையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும். இந்த AdSense கணக்கு மூலம் உங்களுக்கு YouTube இல் சம்பாதிக்கும் பணத்தினை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றம் செய்து கொள்ள முடியும்.

மற்றையது YouTube இல் நீங்கள் பணம் சம்பாதிக்கும் தகுதியினை பெற நீங்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்கள் உங்களது சொந்த வீடியோக்களாக இருப்பது அவசியம். நீங்கள் உங்களது வீடியோக்களில் உபயோகம் செய்யும் இசை, படங்கள் என்பன இன்னொருத்தரின் புலைமைச் சொத்தாக இல்லாததனை உறுதி செய்து கொள்ளுங்கள்.


இல்லாவிடில், உங்களது YouTube சேனல் Copy-strike பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதோடு, YouTube சேனலும் இல்லாமல் போய்விடும். அதோடு, நீங்கள் சட்டச்சிக்கலை சந்திப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. நீங்கள் உங்களது YouTube வீடியோக்களில் பயன்படுத்துவதற்கான இலவச இசைக்கோப்புக்கள் YouTube Audio Library இல் தாராளமாக இருக்கின்றன. அவற்றினை உங்களது வீடியோக்களுக்கு நீங்கள் பாவித்து வீடியோக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

முடிந்த அளவு நீங்கள் YouTube இல் பதிவேற்றும் வீடியோக்கள் உங்களது சொந்த வீடியோவாக இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி செய்தால் உங்களால், நிச்சயமாக ஒரு எதிர்காலத்தில் YouTuber ஆக வர முடியும் என்பதில் துளியளவும் சந்தேகம் கிடையது.©Copyrightlkinfo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *