2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இருப்பினும் பரீட்சை ஆரம்பமாகும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

திகதி பாடநெறி மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சின் அனுமதியின் பேரில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக பரீட்சை நடவடிக்கைகள் தடைபட்டதன் காரணமாக பரீட்சை அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.