பிரியாணி சாப்பிட்ட இளம் பெண் திடீரென மரணம்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

செய்திகள்

புரியாணி உணவான மந்தி புரியாணியை சாப்பிட்ட பின்னர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது.20 வயதான அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற யுவதியே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.


கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் பெரும்பளா என்ற பிரதேசத்தில் வசித்து வந்துள்ள இந்த யுவதி கடந்த 31 ஆம் திகதி இணையத்தளம் வழியாக உள்ளூர் உணவகம் ஒன்றில் குஷிமந்தி புரியாணியை பெற்று சாப்பிட்டுள்ளார்.

உணவை சாப்பிட்ட பின்னர் உடல் நலன் பாதிக்கப்பட்ட யுவதி கார்கோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆபத்தான நிலையில் இருந்த யுவதி கர்நாடக மாநிலத்தின் மங்களுருவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக யுவதியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு கேரளா மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜோர்ஜ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை இதற்கு முன்னரும் கேரளா மாநிலத்தில் கோழிகோடு பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பெற்றுக்கொண்ட மந்தி புரியாணி சாப்பிட்ட மருத்துவ தாதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.கோட்டாயம் மருத்துவக்கல்லூரியில் சேவையாற்றி வந்த தாதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கேரளாவில் ஒரே வாரத்தில் இரண்டு பேர் புரியாணி சாப்பிட்டு இறந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *