தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தானாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் புகைப்படங்கள் சிறிது நாளாக வெளியாகமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார் சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு இருக்கும் நோய் பற்றிய விவரங்களை பதிவாக பதிவிட்டிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவிற்கு பிறகு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருந்த சமந்தா, தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். மையோசெட்டீஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் குறைபாடு உள்ள நோய் இருப்பதாகவும், இது அரிய வகை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நோயோடு போராடிக் கொண்டிருக்கிறேன் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதன் பின்னர் அவருக்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவாக இருந்தனர். உங்களுக்கு ஒன்றும் நேராது, விரைவில் மீண்டு வாருங்கள் என்று தங்களது பிராத்தனைகளை தெரிவித்து இருந்தனர். மீண்டும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து மீண்டு வருவதாக பகிர்ந்து இருந்தார் சமந்தா.

இந்த நிலையில் வெகு நாட்களுக்குப்பிறகு சமந்தா வெளியில் வந்துள்ளார். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த அவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார் சமந்தா.
மேலும் முகத்தில் சிரிப்பே இல்லாமல் கவலை தோய்ந்த முகத்துடன் அவர் சோகமாக தனியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தா உங்களுக்கு இப்படி ஆயிடுச்சே என்று கமெண்டில் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். Watch the below Video.!