இன்றைய காலகட்டத்தில் பொதுவாக சிறுவர் முதல் பெரியவர் வரை உள்ள அனைவருக்கும் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பாரிய பிரச்சனையாகவுள்ளது.இந்த முடி கொட்டும் பிரச்சனையால் மனதளவில் பெரும் பிரச்சனையைகளை ஏற்படுத்துகின்றது.

இந்த முடிகொட்டுவதற்கு அதிக மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, மரபணுக்கள் மற்றும் இரசாயன உபயோகங்கள் என்பன காரணமாக அமைகின்றது.ஆனால் இந்த பிரச்சனைக்கு இயற்கை முறையில் முழுமையான தீர்வுகளை காணமுடியும். அந்த வகையில் அவற்றில் ஒரு வழியினை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி,கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி,கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி.

செய்யும் முறைவெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் முதல் நாள் இரவே ஒரு நாள் இரவு முழுக்க ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்த நாள் காலையில் நன்கு ஊறிய வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதற்கு ஊற வைத்து தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பயன்படுத்தி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து நன்றாக அரைத்து பின்பு அந்த சாறை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும்.இதை காட்டனில் தொட்டு தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு படும்படியும் தலைமுடி முழுவதும் நன்றாக தடவி ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்.

பின்பு தலைமுடியை சீயக்காய் அல்லது மென்மையான ஷாம்பு கொண்ட அலசி கொள்ளலாம். இதனை வாரத்தில் இரண்டு முறை தாராளமாக பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.