இலங்கையில் அரச வேலை தேடி அழைப்பவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்..!! தாமதிக்காமல் உடன் விண்ணப்பியுங்கள்..!!

செய்திகள்

போட்டிப் பரீட்சையின் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.இந்த மாத இறுதியில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


தற்போது பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் பட்டதாரிகள் உட்பட நாற்பது வயதுக்கு குறைந்த பட்டதாரிகள் அனைவரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் 12000 ஆசிரியர்களின் ஓய்வு என்பவற்றின் அடிப்படையில் 22000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கான போட்டிப் பரீட்சைகளை விரைவாக நடாத்தி விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை புதிதாக உள்வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *