தமிழகத்தை சேர்ந்த சிறுவனொருவர் 79ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளார்.16 வயதான இந்திய செஸ் வீரர் பிரனேஷே இந்த தகுதியை அடைந்துள்ளார்.பிரனேஷ் தனது ஐந்தாவது வயதில் இருந்து தனது செஸ் விளையாட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் 13ஆவது வயதில் அவர் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார்.இந்த நிலையிலேயே செஸ் கிராண்ட் மாஸ்டராக அவர் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
