கொழும்பில் பொலிஸாருக்கு மூடிய அறையில் நடந்த சம்பவம்..!!

செய்திகள்

கொழும்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு விடுதிக்கு அழைத்து வரப்பட்டு 5000 ரூபாய் நாணயத்தாள்களால் மாலை அணிவித்து, அதிகாரிகளை வரவேற்று விருந்து வைத்துள்ளனர்.கொழும்பை மையமாகக் கொண்ட போதைப்பொருள் வலையமைப்பின் இரண்டு விநியோக முகவர்கள், தங்களின் கொள்ளைக்கு ஆதரவான பொலிஸ் உத்தியோகத்தர்களை இவ்வாறு கவனித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


4 பொலிஸ் அதிகாரிகளின் சேவையை பாராட்டி நடத்தப்பட்ட இந்த விருந்தில் போதைப்பொருள் வியாபாரிகள் இருவரும் 10 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதிகாரிகள் விருந்துக்கு வந்தபோது, ​​பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய கடத்தல்காரர் ரம்ஜான் எனப்படுபவரினால் 5 ரூபாய் நாணயத்தாள்களினால் செய்யப்பட்ட மாலைகளை அணிவித்து வரவேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாளிகாவத்தை கொட்டா நாயீனின் ஆதரவாளர்களான இந்த கடத்தல்காரர்கள் மருதானை மற்றும் கெசல்வத்தை பொலிஸ் பிரிவுகளை மையப்படுத்தி ஐஸ் மற்றும் ஹெரோயின் விநியோகம் செய்வதாக தெரியவந்துள்ளது.


கொழும்பில் உள்ள இரவு விடுதியொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட விருந்தின் இறுதியில், அவர்கள் மேல் நாணயத் தாள்களை வீசி மகிழ்விப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உணவு விநியோக நிறுவனம் என்ற போர்வையில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *