நெற்றில் குங்குமம் வைக்கும் ஒவ்வொரு சுமங்கலி பெண்களும் தெரிந்து கொள்ளவேண்டிய விடயம்.!!

செய்திகள்

திருமணமான பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கல சின்னமாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில்


குங்குமம் இடுவது கணவனின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என இந்து முறைப்படி நம்பப்படுகிறது. மேலும் விதவைப்பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது இல்லை. இந்துக்களின் ஜோதிட முறைப்படி நெற்றி, மேஷ ராசி அதிபதிக்கு உரியது அதாவது செவ்வாய்க்கு உரியது. செவ்வாயின் நிறம் சிவப்பு ஆகும்

நெற்றியில் குங்குமம் அணிவது மங்கலகரமான விஷயமாக கருதப்படுகிறது. மேலும் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள். குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.


வட இந்தியாவின் முக்கிய விழாக்களான நவராத்திரி மற்றும் சங்கராத்திரி ஆகிய பண்டிகைகளின் போது கணவன் மனைவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிடும் பழக்கம் இருக்கிறது. மேலும் குங்குமம் சக்தி, லட்சுமி, விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. குங்குமானது மஞ்சள், எலுமிச்சை, மெட்டல் மெர்குரி ஆகியவற்றின் கலவையாகும். மெர்குரி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலுறவு விஷயத்திலும் உதவுகிறது. இதனால் தான் கணவனை இழந்த பெண்கள் குங்குமம் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறதாம்.


நெற்றியில் இடும் குங்குமம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் எழாமல் காக்கிறது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.source-kaliakesari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *