யாழினை சேர்ந்த இளம் பெண் செய்த செயல்..!! வாழ்த்துக்கள் அக்கா.!

செய்திகள்

கனடாவில் உயர்கல்வி பயிலும் யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த தயாபரன் சுவேதிகா என்ற மாணவியின் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் கட்டுடை கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டு பிரிவின் ஒழுங்கமைப்பில் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.இன்றைய தினம் தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஊடக இணைப்பாளர் இ.தயாபரன் தலைமையில்

இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், கட்சியின் வட்டார ஒருங்கிணைப்பாளர் உசாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டில் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *