காதலியின் ஆசைய நிறைவு செய்யும் தருணத்தில் பொலிஸரிடம் பிடிபட்ட இளைஞன்..!!!!! இலங்கையில் சம்பவம்.!

செய்திகள்

முன்று லட்சம் பணத்துடனும் 14 வயது காதலியுடனும் கொத்து ரொட்டி சாப்பிட வந்த 17 இளைஞர் பொலிஸாரிடம் பிடிபட்டுள்ள சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இருவரையும் அவதானித்து சந்தேகமடைந்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.


இதன்போது இளைஞன் தந்தையிடமிருந்து மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடி வந்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் குறித்த இளைஞனும் , பதின்மவயது சிறுமியும் பாதுக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், ரோந்து சென்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொத்து ரொட்டி சாப்பிடும் ஆசையின் காரணமாக குறித்த நபர் காதலியான 14 வயது சிறுமியை அழைத்து காலிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இருவரும் நேற்று மாலை கராப்பிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *