இலங்கையில் வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி.!

செய்திகள்

கோவிட் தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கார் உற்பத்தி நிறுவனங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.


குறிப்பாக உற்பத்தி குறைந்ததால் பல நிறுவனங்கள் கார்களுக்கு நல்ல விலையைப் பெற முடிந்தது.அதை இந்த ஆண்டிலும் தக்கவைத்துக்கொள்வதே தங்களது நோக்கம் என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.இதேவேளை, கடந்த வருட இறுதியில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை வேகமாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு

ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த ஆண்டின் இறுதியில் 14 சதவீதமாக அது பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.கார் லீசிங் வசதிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை அதிகரித்துள்ளமை இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
https://youtu.be/_M5VtG3BDKU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *