இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வழங்கப்படவுள்ள நிதி நிவாரணத்தை இன்னும் சில வாரங்களில் பெற்றுக்கொள்ள இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.

இலங்கையின் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, கடந்த வருடம் (2022) சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பணியாளர் ஒப்பந்தம் வெற்றியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.