எமது தமிழர் பூமியில் இல்லாததை தனியாளாக சாதித்து காட்டிய வியக்க வைக்கும் தமிழன்.! வாழ்த்துக்கள் அண்ணா.!!

செய்திகள்

இலங்கையின் வடக்கில், இயக்கச்சி எனும் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவிலான ஒரு காணியை புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். அதில் பெரும்பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.


பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் உள்ளே ஹொட்டேல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்தனை வசதிகளும் கொண்டுவரப்படுகின்றன.

குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் பெரும்வளர்ச்சி காண்கிறது. REECHA என்பது நிறுவனத்தின் பெயர்.இங்கு 200 வரையான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளே பல்வேறு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒரு பின்தங்கிய கிராமத்தில், சர்வதேச தரத்தில் ஒரு பண்ணையை அமைத்து, அதில் பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி, புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறார் நமது கரன் அண்ணா. அவரிடம் இருக்கும் பணத்துக்கும் வசதிக்கும் இப்படி ஒரு வரண்ட பிரதேசத்தில் போய்நின்று ஆடு, மாடு, பன்றிகள் வளர்க்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் தாய் நாட்டின்மீதான பற்றும் காதலும் அங்கிருக்கும் எமது உறவுகளுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் எனும் உந்துதலுமே இந்த முயற்சியில் அவரை ஈடுபட வைத்திருக்கிறது. Reecha குறித்து நான் இங்கே எழுதியிருப்பது மிகச் சொற்பமே. கரன் அண்ணாவின் YouTube க்குச் சென்று பாருங்கள்.

‘BK in Reecha’ என்று ஒரு நிகழ்ச்சித் தொடர் இருக்கும். அதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஏராளமான தகவல்கள் உள்ளன. வெளிநாடுகளில் எத்தனையோ ஈழத்தமிழ் மில்லியனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயகத்தில் முதலிட தயங்குகிறார்கள். ஆனால் கரன் அண்ணா துணிந்து இறங்கியிருக்கிறார். அந்தத் துணிச்சலுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

Reecha வின் நோக்கமும் குறிக்கோளும் சிறப்பாக ஈடேற வேண்டும். எமது மக்கள் பொருளாதார ரீதியாக மேலும் முன்னேற வேண்டும். பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாகும்.
வாழ்த்துக்கள் கரன் அண்ணா மற்றும் Reecha குழுவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *