கூடியவரையில் உடனடி சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.என் பெரிய மாமாவின் தலைமுறையில், அனைவரும் சொந்தத்தில் திருமணம் செய்தவர்கள்,
அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் (என்னுடைய மாமா மற்றும் அத்தைகள்) , அனைவருக்கும் சொல்லி வைத்தது

போல ஒரே குறை, தலைமுடி, புருவமுடி, தாடி மற்றும் மீசை செம்பட்டை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். தோலும் ஒரே மாதிரியான நிறமாக இல்லாமல் அங்கங்கே வெள்ளை வெள்ளையாய் இருக்கும்.அதுபோக, சில தம்பதிகளுக்கு

பார்வை குறைபாடு,கை கால் குறைபாடுடைய குழந்தைகள் பிறந்தும் பார்த்ததுண்டு, அவர்கள் படும் துன்பம் சொல்லி மாளாது.உடனடி சொந்தத்தில் திருமணம் செய்கையில், ஆணிடம் இருந்தும், பெண்ணிடம் இருந்தும் கிடைக்கக்கூடிய குரோமோசோம்கள் சரிவர கிடைக்காததே இந்த துன்பத்திற்க்குக் காரணம்.(இது முற்றுமுழுதான ஒரு தனிநபரின் கருத்து )