என்னை கட்டாயப்படுத்தினார்கள் அதனால் திருமணம் செய்து கொண்டேன், பெண் அழகாக இருந்தாள் அதனால் திருமணத்திற்கு சரி என்று தலையாட்டி விட்டேன் என்று எல்லாம் உவமைபடுத்தி எழுதவும் தோணவில்லை, உருவகப்படுத்தி எழுதவும் தோணவில்லை.

என் உள்ளத்தில் உள்ள உண்மையை எழுதுகிறேன்.படிக்க உங்களிடம் சிறிது நேரம் இருந்தால் படியுங்கள்.”எனக்கு 70 உனக்கு 67 வயதாகி இருக்கும், எனக்கு முடி கொட்டி வலுக்கை விழுந்திருக்கும், உனக்கு முகத்தில் தோல் எல்லாம் சுருங்கி இருக்கும் நீ உன்னுடைய அழகை இழந்திருப்பாய், நான் உன்னை விளையாட்டாக ஏமாற்ற வைத்திருந்த அறிவை எல்லாம் இழந்திருப்பேன்.
நமது, பெற்றோர்கள் ஒரு நாள் வயதாகி கடவுளை அடைந்திருப்பர்கள். நாமும் அதை நோக்கியே நாட்களை கடந்து கொண்டிருப்போம். நமது குழந்தைகள் எல்லாம் திருமணம் ஆகி, பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோசமா இருப்பாங்க.

நாம் தாத்தா, பாட்டி என்று கூறிய காலம் போக, நம்மை தாத்தா பாட்டி என்று கூற பேரன் பேத்திகள் பிறந்திருப்பார்கள்.உன்னை கிழவி என்பார்கள் என்னை கிழவன் என்பார்கள், நரைமுடி கூடி விட்டது அல்லவா…அப்படித்தான் அழைப்பார்கள்.
27 வயதில் உன்னை காதலித்து திருமணம் செய்திருப்பேன்.அப்பொழுது நான் திருமணம் செய்து 43 வருடங்கள் ஆகியிருக்கும், சுக துக்கங்களை அனைத்தையும் இந்த கடினமான வாழ்க்கையில் ஒன்றாகவே கடந்திருப்போம். எனக்கு துணையாக நீயும் உனக்கு துணையாக நானும் ஒருவரை ஒருவர் விலகி விடாது ஒன்றாகவே பயணித்திருப்போம்.

அந்த மூப்பு எய்த காலத்தில், தனியாளாக நான் மட்டும் இருந்தால் , நான் அனுபவித்த அத்தனை இன்ப துன்பங்களையும், நாம் ஒன்றாக சிரித்து மகிழ்ந்த அந்த அருமையான காதல் நாட்களையும், யாரிடம் சொல்லி மகிழ்வேன் என் காதலி உனைவிடுத்து?
நாம் அனுபவித்த நினைவுகளை ஒன்றாக மீண்டும் ஒரு முறை அசை போட, என் வாழ்வின் துணையான நீ என்னுடன் வேண்டும் அல்லவா…அதற்காக தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியிருப்பேன்.அப்பெண்ணிடம்

புரியவில்லையாங்க…நீங்கள்தானே கேட்டீர்கள் ஒரு பெண் உங்களிடம் நீங்கள் எதற்காக திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று கேட்டாள் என்ன சொல்வீர்கள் என்று.அப்பெண் என் மனைவியாக வேண்டுமென்று எனக்கு ஆசையிருந்திருந்தால் மேலே சொன்னது போல்
அதற்காக தான் உன்னை( அப்பெண்ணை) திருமணம் செய்து கொள்கிறேன் என்று என் காதலை சொல்லி இருப்பேன் இதுவும் ஒருவிதமான proposal தாங்க…கேள்வி கேட்டது ஒரு பெண்ணாக இருந்தால் பரவாயில்லை, அப்படி இல்லையென்றால், தயவுசெய்து என் காதலை மறந்து விடுங்கள்… தெரியாமல் சொல்லிவிட்டேன்