கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான கர்நாடக சங்கீத தேசிய மட்ட போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியின் வாத்திய இசைக்குழு கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் துஷ்யந்தன் பிரசன்னன் (13 Maths), துஷ்யந்தன் பிரசாந்தன் (13 Bio), கருணாகரன் திவாசவன் (13 Bio), ஆனந்தஜோதி அபிஷாகர் (12 Bio), ஸ்ரீஸ்கந்தராசா வருண் (12 Maths), கணேஸ்வரன் வித்யாசாகர் (12 Maths), கணேஸ்வரன் திவ்யாசாகர் (11 A), அகிலன் கதிலன் ( 11 A ), பங்குபற்றியுள்ளனர்.இவர்களுக்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
