புத்தாண்டில் நுழைந்த மறுநாளே புத்திகாரகனான புதன் தனது நிலையை மாற்றியுள்ளார். அதாவது வக்ர நிலையில் தனுசு ராசியில் உள்ள புத்திகாரகனான புதன், ஜனவரி 02 ஆம் தேதி அஸ்தமனமாகியுள்ளார். இந்த புதன் அஸ்தமனத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் மோசமான பலனையும் பெற வாய்ப்புள்ளது. புதன் இந்த அஸ்தமன நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் தேதி வரை இருப்பார்.

புதன் குரு ஆளும் தனுசு ராசியில் அஸ்தமனமாகியுள்ளதால், பல ராசிக்காரர்கள் நஷ்டத்துடன், நிறைய பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது எந்த ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனத்தால் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியிருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் சற்று மோசமான பலன்களையே பெறக்கூடும். குறிப்பாக இக்காலத்தில் மற்றவர்களுடன் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்படக்கூடும். மேலும் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டின் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படக்கூடும். சிலர் ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உறவுகளிலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருங்கள்.
மிதுனம்மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் கூட்டு தொழில் செய்ய விரும்பினால், அதை சற்று தள்ளிப் போடுவது நல்லது. இல்லாவிட்டால் நஷ்டத்தை மற்றும் மோசமான பலன்களைப் பெறக்கூடும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் விளைவாக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கடகம்புதன் கடக ராசியின் 6 ஆவது வீட்டில் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் தொழில் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் தொழில் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்கலாம். மேலும் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் தீங்கை விளைவிக்கும். நிதி ரீதியாக இக்காலம் சற்று மோசமாக இருக்கும். ஏமாறுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.Source:boldsky