கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்..!!!

செய்திகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய இலத்திரனியல் வரிச்சலுகை வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வேலைக்காக சென்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்காக இந்த வளாகம் திறக்கப்பட்டுள்ளது.


விமான நிலையத்தின் வருகை முனையத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த இலத்திரனியல் பொருட்களைக் கொண்ட இந்த வணிக வளாகங்கள் மூலம் தரமான இலத்திரனியல் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்று விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கடைத்தொகுதி 31 கடைகளகை கொண்டுள்ளதோடு, மக்களுக்கு உச்சபட்ச தரமான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கப்படும் இந்த வர்த்தகக் கடைத் தொகுதி மூலம் விமான நிலைய நிறுவனம் சுமார் 30 மில்லியன் ரூபா மாத வருமானத்தை எதிர்பார்க்கிறது.


கடந்த காலங்களில் விமான நிலையத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்த வாடிக்கையாளர்கள் பாரிய அநீதிகளை எதிர்நோக்க நேரிட்டதாக வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர்

நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளது.எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்லை. இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால் உடனடியாக குத்தகையை இரத்து செய்ய விமான நிலைய தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *