யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் கடித்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,

ஊர்காவற்துறை பகுதியில் அமைந்துள்ள சூதாட்ட நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டபோது சூதாட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.ஓடிய சூதாட்டகாரர்களை துரத்திச் சென்ற பொலிஸார்
இந்நிலையில் கான்ஸ்டபிள் ஒருவர் ஓடிய சூதாட்டகாரர்களை துரத்திச் சென்று ஒருவரைப் பிடித்தார்.
இதன்போது சந்தேகநபர் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி அவரது பிடியில் இருந்து தப்பிக்க கடுமையாக முயற்சித்து பொலிஸ் கான்ஸ்டபிளின் கன்னத்தையும் கடித்து காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் கான்ஸ்டபிளின் இரும்புப் பிடியால் சந்தேக நபரின் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தார்.இதனையடுத்து கைதான 33 வயதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளதாகவும் கூறப்படுகின்றது.