2023 ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். பலருக்கும் புத்தாண்டு ஒரு நல்ல ஆண்டாக இருக்க வேண்டுமென்ற ஒரு ஆசையும், எதிர்பார்ப்பும் இருக்கும். என்ன தான் நாம் கடினமாக உழைத்தாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருந்தால் தான் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காண முடியும்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு பிரமாதமாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கப் போகிறது. அதுவும் இந்த மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும், திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நற்செய்தியைப் பெறுவார்கள், நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். மொத்தத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். இப்போது 2023 ஜனவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி சிறப்பாக இருக்கும். குறிப்பாக திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடும் வகையில் பயணத்தை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்றாலும், அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் இம்மாதத்தில் நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். சிக்கிய பணமும் இம்மாதத்தில் கைக்கு வந்து சேரும். தொழிலில் புதிய யோசனைகளால் நல்ல லாபத்தைப்
பெறுவார்கள். பணியிடத்தில் வேலைச்சுமை குறைவதால், சற்று ரிலாக்ஸாக இருக்க முடியும். பழைய நண்பர்களை சந்திக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் முடிவாகும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும்.
துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஜனவரி மாதம் அருமையான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் வீட்டின் சூழல் இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

தனுசு2023 ஜனவரி மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து சில ஆச்சரியங்களைப் பெற வாய்ப்புள்ளது.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் இமேஜ் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும். இருப்பினும் பணிச்சுமை சற்று அதிகமாகவே இருக்கும்.

மகரம்மகர ராசிக்காரர்களுக்கும் ஜனவரி மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து இம்மாதத்தில் ஒரு நற்செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.