இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, இந்த ஆண்டாவது நமது வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். அதற்கு ஜோதிடம் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் ஜோதிடத்தில், கிரகங்களின் நிலையைக் கொண்டு ஒருவருக்கு கிடைக்கவிருக்கும் பலன்கள் கணித்து கூறப்படுகின்றன.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் சனி, குரு போன்ற முக்கிய கிரகங்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும். அதே வேளையில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும். உங்கள் ராசிப்படி 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள் உங்கள் ராசிப்படி 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் கீழே 12 ராசிகளுக்குமான 2023 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம் மேஷ ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் இருப்பார். இதனால் நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். இருப்பினும் உங்கள் பேச்சு மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது உறவில் பிரச்சனையை ஏற்படுத்தும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 5 ஆவது வீட்டில் செவ்வாய் இருப்பதால், உறவு சிறப்பாக இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கும். அதன் பின் படிப்படியாக விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டில் சராசரி வெற்றியைக் காண்பீர்கள். இருப்பினும் தொழில் ரீதியாக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். ஆயினும், உங்களின் கடின உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவீர்கள். குரு பகவான் ஏப்ரல் 22 வரை 11 ஆவது வீட்டில் இருப்பதால், எவ்வித நிதி பிரச்சனையையும் எதிர்கொள்ள மாட்டீர்கள். ஆனால் ராகு 12 ஆவது வீட்டில் இருப்பதால், அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். ஆண்டின் நடுப்பகுதியில், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் வணிகம் விஷயமாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும். மேலும் அதிக செலவுகள் காரணமாக நிதி பிரச்சனையை சந்திக்கலாம். ஏப்ரல் 22 முதல் குரு பகவான் 12 ஆவது வீட்டில் ராகு மற்றும் சூரியனுடன் இணைந்திருப்பதால், ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆண்டின் கடைசி இரண்டு மாதங்கள் உங்களுக்கு அற்புதமானது என்பதை நிரூபிக்கும். வேலை செய்யும் போது சற்று கவனமாக இருங்கள்.
மிதுனம் மிதுன ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் உடல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சற்று சிரமமாக இருக்கும். ஏனெனில் சனி 8 ஆவது வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து இருக்கிறார் மற்றும் செவ்வாய் 12 ஆவது வீட்டில் வக்ர நிலையில் உள்ளார். ஆனால் இந்த ஆண்டில் உங்கள் சிரமங்கள் அனைத்தும் சரியாகும். ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் 9 ஆவது வீட்டிற்கு செல்வதால், உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்கள் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். ஆரோக்கிய பிரச்சனைகள், நிதி பிரச்சனைகள் அனைத்தும் குறையும். குரு ஏப்ரல் 22 ஆம் தேதி 11 ஆவது வீட்டில் நுழைவதால், நிதி நிலை மேம்படும். ஆனால் குரு மற்றும் ராகு சேர்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது. இருப்பினும் பணம் உங்களைத் தேடி வரும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்படுவீர்கள். அக்டோபர் 30 ஆம் தேதி குரு, ராகுவுடன் இருந்து பிரிகிறார். இதனால் நிதி நிலை வலுவாக இருக்கும். அதோடு ஜூன் 4 ஆம் தேதி நிகழும் புதன் பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் கிடைக்கும். அப்போது ராகு 10 ஆவது வீட்டிற்கு செல்வதால், சிலர் தங்களின் துறைகளில் மாற்றங்களைக் காண்பார்கள்.
கடகம் கடக ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் 11 ஆவது வீட்டில் இருப்பதால், நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் பொருளாதாரா நிலை முன்னேற்றத்தை நோக்கி செல்லும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நிலம் வாங்குவது மற்றும் விற்பது நல்ல நிதிப் பலன்களைத் தரும். ஆனால் காதல் உறவுகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜனவரி 17 ஆம் தேதி சனி 8 ஆவது வீட்டிற்கு செல்வதால், அஷ்டம சனி தொடங்குகிறது. எனவே இக்காலத்தில் சில மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஆனால் யோகா செய்தால், சிறப்பாக செயல்படுவீர்கள். ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். அப்போது ராகு மற்றும் சூரியனுடன் சேர்ந்து பயணிப்பார். எனவே இக்காலத்தில் உங்கள் வேலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் மற்றும் அந்த மாற்றம் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வகையில் இருக்கும். ஏனெனில் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். எனவே 10 ஆவது வீட்டில் குரு பகவான் மட்டும் இருப்பார். இதன் காரணமாக, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
சிம்மம் சிம்ம ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டில் சற்று கலவையான பலன்களையே பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தல் சனி பகவான் 6 ஆவது வீட்டில் இருப்பதால், உங்கள் எதிரிகளை பலவீனப்படுத்தி உங்களை அவர்களிடம் இருந்து காப்பார். இருப்பினும், குரு உங்கள் 8 ஆவது வீட்டில் இருப்பதால், சில நிதி பிரச்சனைகளை சந்திக்க வைப்பார். உங்கள் ராசி நாதனான சூரியன் 5 ஆவது வீட்டின் ஆண்டின் தொடக்கத்தில் இருப்பதால், நிதி நிலை சற்று நன்றாக இருக்கும். இருப்பினும், சூரியன் மற்றும் புதன் இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம் உங்களுக்கு அறிவையும் நல்ல வழிகாட்டுதலையும் வழங்கும். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏப்ரல் 22 ஆம் தேதி குரு 9 ஆவது வீட்டிற்கு செல்வதால், இந்த ஏப்ரல் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் ராகு மற்றும் குரு சேர்ந்திருப்பதால், இக்காலத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை சற்று தள்ளிப் போடுங்கள். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே எந்த முக்கிய வேலையையும் தொடங்காதீர்கள். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கு பின் படிப்படியாக வெற்றியைக் காண்பீர்கள். அக்டோபர் 30 ஆம் தேதி ராகு பெயர்ச்சிக்கு பின், பணப் பிரச்சனைகள், ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி கன்னி ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் 9 ஆவது வீட்டில் இருப்பதால் எதிர்பாராத சில நேர்மறையான விளைவுகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டத்தில் சில சரிவை காணக்கூடும். ஆனால் நம்பிக்கை இருந்தால் நல்லது நடக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சனி சுக்கிரனின் 5 ஆவது வீட்டில் இருந்து, ஜனவரி 17 ஆம் தேதி 6 ஆவது வீட்டிற்கு செல்வதால், காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மேலும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்வில் வெற்றியைக் காண்பீர்கள். குரு 7 ஆவது வீட்டில் இருப்பதால், உறவுகள் வலுவடையும். ஏப்ரல் மாதத்தில் குரு 8 ஆவது வீட்டிற்கு வருவதால் ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவார்கள். ஆனால் அதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். சனி பகவான் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் யோகத்தை உருவாக்குவார். ராகு அக்டோபர் 30 ஆம் தேதி 7 ஆவது வீட்டிற்கு செல்வதால், வாழ்க்கைத் துணையுடன் சற்று பிரச்சனையை சந்திக்க வைப்பார் மற்றும் ஆரோக்கியத்திலும் பிரச்சனைகள் வரும். எனவே இக்காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துலாம் துலாம் ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டில் நீங்கள் புதிய வீடு அல்லது கார் வாங்கும் வாய்ப்புள்ளது. செல்வம் பெருகும் மற்றும் உங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் 5 ஆவது வீட்டிற்கு செல்வதால், காதல் உறவுகள் சோதனைக்கு உட்படுத்தப்படும். உங்கள் துணைக்கு நேர்மையாக இருந்தால், உங்களின் பிணைப்பு வலுவடையும். இல்லாவிட்டால் முறிந்துவிடும். இந்த ஆண்டு மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் கடினமாக உழைத்தால் அதற்கான பலனை சனி பகவான் வழங்குவார். அதன் பின் 7 ஆவது வீட்டிற்கு வரும் போது, திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். வணிக வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் குரு, ராகு இணைந்திருப்பது, உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். அக்டோபர் மாதத்தில் ராகு 6 ஆவது வீட்டிற்கு செல்லும் போது உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீர்கள். குரு பகவான் 7 ஆவது வீட்டில் இருப்பதால், திருமணம் மற்றும் தொழில் வாழ்க்கை சிறக்கும்.
விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டானது உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதுவும் சனி பகவான் வியாபாரத்தில் அபாயங்களை எடுக்க வைத்து முன்னேற வைப்பார். குரு பகவான் சிறந்த நிதியைப் பெற உதவுவார். மாணவர்கள் இந்த ஆண்டில் தங்களுக்கென்று ஒரு நல்ல பெயரை உருவாக்குவார்கள். ஆண்டின் முதல் பாதி மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனென்றால் முன்னேற்றத்திற்கான பல அற்புதமான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஜனவரி 17-ம் தேதி சனி பகவான் 4 ஆவது வீட்டிற்கு சென்ற பின்னர் இடமாற்றம் ஏற்படும். ஏப்ரல் 22 ஆம் தேதி குரு 6 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் ராகுவுடன் இணைந்து பயணிப்பார். எனவே இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆனால் அக்டோபர் 30-க்கு பின் இந்நிலை மாறும். ஏனெனில் ராகு அக்டோபர் 30 ஆம் தேதி 5 ஆவது வீட்டிற்கு செல்வார் மற்றும் 6 ஆவது வீட்டில் குரு பகவான் இருந்து, வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை வழங்குவார்.
தனுசு தனுசு ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டு நல்ல பலனை அளிக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். ஏனெனில் ஆண்டின் தொடக்கத்தில் சனி 2 ஆவது வீட்டில் இருப்பார். இருப்பினும் ஜனவரி 17 ஆம் தேதி சனி 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களின் தைரியமும், வலிமையும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆனால் மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 வரை குரு பகவானின் நிலையால், வேலையில் சில தடைகள் ஏற்படலாம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். ஏப்ரல் மாதத்தில் காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால், இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடனான உறவில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் குழந்தைகளுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். இக்காலத்தில் நிதி ரீதியாக முன்னேற்றத்தை அடைவீர்கள்.
மகரம் மகர ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டு சிறந்த பலன்களைத் தரும் ஆண்டாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் ஜனவரி மாதத்தில் 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் நிதி நிலை நன்றாக இருக்கும். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிலம்/சொத்து வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் லாபம் அடைவீர்கள். வீடு கட்டுவதிலும் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருப்பதால், நம்பிக்கை அதிகரித்த, பல வேலைகளை செய்வீர்கள். சுக்கிரன் ஏப்ரல் 2 முதல் மே 2 வரை 5 ஆவது வீட்டில் இருப்பதால், உங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் குரு 4 ஆவது வீட்டில் நுழையும் போது ராகுவுடன் இணைவதால், வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். நவம்பர் 3 முதல் டிசம்பர் 25 வரை உங்களின் தன்னம்பிக்கை குறைய வாய்ப்பிருந்தாலும், தொழிலில் வெற்றியைப் பெறுவீர்கள். இதற்கு காரணம் மற்ற கிரகங்களின் நிலை தான்.
கும்பம் கும்ப ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆண்டின் தொடக்கத்தில் பண பிரச்சனைகளைத் தவிர்க்க, செலவுகளைக் கண்காணிக்க வேண்டும். ஆனால், ஜனவரி 17 ஆம் தேதி சனி லக்ன வீட்டிற்கு வருவதால், சாதகமான பலன்கள் கிடைக்கும் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்தில், குரு 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்கள் உடன்பிறப்புகள் உடல் ரீதியாக சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும் போது, குறுகிய மற்றும் மத பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் குடும்பத்தில் நல்லிணக்கம், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும், செலவுகள் குறையும், பொருளாதார நிலை சீராகும்.
மீனம் மீன ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் மிகவும் சாதகமாக இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தாக இருக்கும். இந்த ஆண்டில் குரு பகவான் சொந்த ராசியில் இருப்பதால், சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள் மற்றும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஆனால், ஜனவரி 17 ஆம் தேதி சனி 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குரு பகவான் ஏப்ரல் 22 ஆம் தேதி 2 ஆவது வீட்டில் ராகுவுடன் சேர்ந்து பயணிக்கிறார். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே ஆரோக்கிய பிரச்சனைகள் மட்டுமின்றி, குடும்பத்திலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் செய்பவர்கள் சற்று புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மீன ராசிக்கு நுழையும் போது, குரு பகவான் 2 ஆவது தனித்து இருக்கும் போது, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.